ஆப்நகரம்

லோகேஷை கண்டமேனிக்கு விளாசிய பா. ரஞ்சித்: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.!

லோகேஷ் கனகராஜை கடுமையாக சாடி இயக்குனர் பா. ரஞ்சித் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 16 Jun 2022, 8:18 am
'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். முதல் படத்திலே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற இவர், இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் 'கைதி' படத்தை இயக்கினார். விஜய்யின் 'பிகில்' படத்துடன் நேரடியாக மோதிய இந்தப்படம் லோகேஷின் தனித்துவமான இயக்கத்தால் மெஹா ஹிட் அடித்தது.
Samayam Tamil Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj


அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. இந்நிலையில் தனது நான்காவது படைப்பாக 'விக்ரம்' படத்தை இயக்கினார்.கமல் படங்களை பார்த்தே நான் சினிமாவிற்கு வந்தேன் என வெளிப்படையாக கூறிய பேன் பாயான லோகேஷின் இயக்கத்தில் கமல் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘விக்ரம்’ படம். கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பரபரப்பான திரைக்கதை அமைப்பினாலும், ஆக்ஷன் காட்சிகளினாலும் அனைத்து தரப்பு ரசிக்ரகளையும் கவர்ந்து வருகிறது.

லோகேஷ் அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். அடுத்தடுத்து நான்கு படங்களும் ஹிட்டடித்துள்ளதால் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தின் பார்வையும் லோகேஷின் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் லோகேஷின் மாநகரம் படம் குறித்து பா ரஞ்சித் பேசி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மாநகரம் படத்தில் இடம்பெற்ற ஒரு கெட்ட வார்த்தை கோபத்தை தூண்டுகிறதாம்.

நீண்ட இடைவேளைக்கு பின் ஐஸ்வர்யா செய்துள்ள காரியம்: ஷாக்கில் ரசிகர்கள்.!

ஏன், இதற்கும் முன் சென்னையை தவிர்த்து வேறு எந்த ஒரு ஊரிலும் கெட்ட வார்த்தையை நீங்கள் கேட்டதே இல்லையா? இந்த வார்த்தை கேட்டவுடன் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், அது சைக்கலாஜிக்கல் பிரச்சனை. இவ்வாறு ரஞ்சித் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இத்தனை ஆண்டுகளுக்கு பகிர்வதற்கான காரணம் என்ன எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்