ஆப்நகரம்

மெர்சல் வசனங்களை நீக்க வேண்டிய தேவையில்லை: பா.ரஞ்சித்

மெர்சல் படத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களை நீக்க வேண்டிய தேவையில்லை என காலா பட இயக்குநர் பா.ரஞ்ஜித் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 21 Oct 2017, 3:36 am
மெர்சல் படத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களை நீக்க வேண்டிய தேவையில்லை என காலா பட இயக்குநர் பா.ரஞ்ஜித் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil director pa ranjith lends his support for vijays mersal
மெர்சல் வசனங்களை நீக்க வேண்டிய தேவையில்லை: பா.ரஞ்சித்

தடைகள் பலவற்றைக் கடந்து மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்நிலையில், படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

பாஜகவின் கருத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நிருபர்களைச் சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித், “மெர்சலில் இடம் பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டிய அவசியமில்லை. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் மக்களின் கருத்துகளைத் தான் பிரதிபலிக்கின்றன,” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

Director Pa.Ranjith lends his support for Vijay’s Mersal.

அடுத்த செய்தி

டிரெண்டிங்