ஆப்நகரம்

மதுரை சம்பவத்தில் கமல்: பிரபல இயக்குனர் வெளியிட்ட மரண மாஸ் அப்டேட்..!

'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமலுடன் ஒரு படம் பண்ண போவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.

Samayam Tamil 16 May 2022, 7:51 am
Samayam Tamil Kamal Haasan
Kamal Haasan

கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்யும் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது..

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இய்க்குமார் லோகேஷ் கனரகாஜ். கமலின் பேன் பாயான இவர் தற்போது 'விக்ரம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். விஸ்வரூபம் 2 படத்தை தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமலின் படம் என்பதால் 'விக்ரம்' படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான அனிருத் இசையில் கமல் பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடல் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. 'ஆழ்வார் பேட்டை ஆண்டவா' பாடலை போல சென்னை ஸ்லாங்கில் கமல் பாடி அசத்தியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். விண்டேஜ் கமலாக இறங்கி அடித்துள்ளதாக பாடலை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, சிம்பு, பா. ரஞ்சித், அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் கமல்ஹாசனும் தானும் இணையவுள்ள படம் குறித்துப் பேசியுள்ளார்.

கமலின் மாஜி மனைவி சரிகா நடிப்பில் வெளியாகியுள்ள ஆந்தாலஜி படம்..! - சர்ச்சை
இந்தப் படம் மதுரையை மையமாகக் கொண்டு, விருமாண்டி ஸ்டைலில் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். மதுரை என்றால் வேஷ்டி, சட்டை என்றில்லாமல் கோர்ட் ஷுட்டுடனும் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்துள்ள இந்த மரண மாஸ் அப்டேட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. பா. ரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் படம் ஒன்றை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்