ஆப்நகரம்

Namma Veettu Pillai: பாட்டு கேட்கும் போதே அழுத இயக்குநர் பாண்டிராஜ்!

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் உள்ள கண்ணான கண்ணே என்ற பாடலைப் போன்று தனக்கு ஒரு பாடம் வேண்டும் என்று கேட்ட இயக்குநர் பாண்டிராஜ் அந்தப் பாடலை கேட்டதுமே அழுதுவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Sep 2019, 8:35 pm
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, பாரதிராஜா, யோகி பாபு, அனு இம்மானுவேல், சூரி, தம்பி ராமையா, மீரா மிதுன், ஷீலா ராஜ்குமார், ஆர்.கே. சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
Samayam Tamil Sivakarthikeyan


அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயன் அண்ணனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாகவும் நடித்துள்ளனர். அண்மையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

ட்விட்டரை அலறவிட்ட ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்!

வெளியாகிறது ஜெயலலிதா பயோபிக்

பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு கட்அவுட், எனக்கு கெட்அவுட்டா?: சூப்பர் ஸ்டாரை விளாசிய நடிகை

இப்படத்திலுள்ள உன் கூடவே பொறக்கணும் என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இப்பாடல் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் ட்விட்டரில் கண்ணான கண்ணே மாதிரி ஒரு பாடல் வேணும் என்று கேட்டதுக்கு, டியூன் போடும் போதே அழுதுகிட்டே கேட்ட பாடல் என்று உன் கூடவே பொறக்கணும் என்ற பாடலை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், பலரும் இந்த பாடலை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.


கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், அக்டோபரில் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஒருவேளை இப்படம் அக்டோபரில் வெளியானால், அந்த மாதம் அசுரன், சங்கத்தமிழ், பிகில் ஆகிய படங்களுக்கு போட்டியாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் கூட்டணியில் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக பாண்இராஜ் இயக்கத்தில் குடும்பக்கதை, விவசாயத்தை மையப்படுத்திய கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


நம்ம வீட்டுப்பிள்ளை படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்