ஆப்நகரம்

பூமராங் படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் அதர்வா!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் அதர்வா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.

Samayam Tamil 27 Oct 2018, 4:51 pm
பூமராங் படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் அதர்வா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil athe
பூமராங் படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் அதர்வா!


ஜெயம்கொண்டான’, கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆர். கண்ணன்.

இதனைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ள படம் பூமராங். மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். விவசாயிகள் பிரச்சினையை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 17-ந்தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் ஆர் கண்ணன் மீண்டும் அதர்வா உடன், புதிய படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு . டிசம்பர் மாதம் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்