ஆப்நகரம்

சார்பட்டா பரம்பரையை பார்த்து ரஞ்சித்துக்கு ஆன்லைனில் முத்தம் கொடுத்த பிரபலம்

ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் பார்த்த இயக்குநர் ராஜு முருகன் தோழன் ரஞ்சித்துக்கு அன்பு முத்தங்கள் என்று கூறி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

Samayam Tamil 27 Jul 2021, 2:25 pm
சார்பட்டா பரம்பரை படம் பார்த்த இயக்குநர் ராஜு முருகன் இது குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டிருக்கிறார்.
Samayam Tamil director rajumurugan appreciates pa ranjith for sarpatta parambarai
சார்பட்டா பரம்பரையை பார்த்து ரஞ்சித்துக்கு ஆன்லைனில் முத்தம் கொடுத்த பிரபலம்


சார்பட்டா பரம்பரை

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன், பசுபதி, ஜான் கொக்கன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்த சார்பட்டா பரம்பரை படம் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் பார்த்த அனைவரும் ஆஹோ ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் இயக்குநர் ராஜுமுருகனும் சார்பட்டா பரம்பரையை பாராட்டியிருக்கிறார்.

ராஜுமுருகன்

ராஜுமுருகன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'சார்பட்டா பரம்பரை' - அசலான குத்து. உருவாக்கத்திலும் உணர்வு தளத்திலும் அவ்வளவு உழைப்பு. நம் மண்ணின் முகங்களை வாழ்வியலை மிக சுவாரஸ்யமாக திரைப்படுத்தியிருக்கும் தோழன் @beemji க்கு அன்பின் முத்தங்கள். அற்புதமாக பங்களித்திருக்கும் @arya_offl @Music_Santhosh @ActorPasupathy @muraligdop T.ராமலிங்கம் @KalaiActor @officialdushara உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்..! என தெரிவித்துள்ளார்.

நாசர்

சார்பட்டா பரம்பரையை பார்த்து ரஞ்சித்துக்கு முத்தம் கொடுக்க விரும்பியது ராஜுமுருகன் மட்டும் அல்ல நாசரும் தான். படம் பார்த்த நாசர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, தம்பி ரஞ்சித்,

உன்ன நான் பாராட்ட மாட்டேன். உங்கையப் புடிச்சி ஒருநூறு முத்தங்கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்த மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எஞ்சமூகத்துக்கு கொடுத்ததுக்கு... என்றார்.

பாராட்டு மழை

சார்பட்டா பரம்பரை படம் வெளியானதில் இருந்து இன்று வரை சமூக வலைதளங்களில் ஒரே பாராட்டு மழையாக இருக்கிறது. ஆர்யா இஸ் பேக், ரஞ்சித் இஸ் பேக் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆர்யாவின் கெரியரில் மறக்கவே முடியாது படமாக அமைந்துவிட்டது சார்பட்டா பரம்பரை. இந்நிலையில் நடிகர் மாதவனும் ஆர்யாவை பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்