ஆப்நகரம்

பாகுபலிக்காக பாலிவுட்டை எதிர்க்கும் ராம் கோபால் வர்மா..!

பாகுபலி 2 படத்தின் வெற்றியை பார்த்து, பாலிவுட் இயக்குநர்கள் பொறாமைப்படுவதாக இயக்குநர் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 30 Apr 2017, 6:40 pm
பாகுபலி 2 படத்தின் வெற்றியை பார்த்து, பாலிவுட் இயக்குநர்கள் பொறாமைப்படுவதாக இயக்குநர் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil director ram gopal varma criticised bollywood for baahubali 2
பாகுபலிக்காக பாலிவுட்டை எதிர்க்கும் ராம் கோபால் வர்மா..!


ஆந்திராவில் பிறந்த ராம் கோபால் வர்மா, தற்போது மும்பையில் வசித்து வருகிறார். சில தெலுங்கு படங்களை அவர் இயக்கிருந்தாலும், பெரும்பாலும் பாலிவுட் படங்கள்தான் அவருக்கு வெற்றிப்பட இயக்குநர் என்ற பெயரை தந்தன. இதனால் சில நேரங்களில் தெலுங்கு படங்களையும், தெலுங்கு ஹீரோக்களையும் டிவிட்டரில் கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவரது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் ஆச்சரியத்தக்க வகையில், பாகுபலி 2 படத்திற்காக வரிந்து கட்டிக் கொண்டு
ஆதரவளித்து வரும் ராம் கோபால் வர்மா, பாலிவுட் திரையுலகையும் விமர்சித்து வருகிறார். “ரம்ஜான் இல்லை,தீபாவளி இல்லை, கிறிஸ்துமஸ் இல்லை. அமீர்கான் இல்லை, ஷாருக்கான் இல்லை. ஆனால் டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி 2 திரைப்படம் சரித்திரம் படைத்துள்ளது. ராஜமெளலி பாலிவுட் இயக்குநர்களின் முகத்தில் அறைந்துவிட்டார்.” என ராம் கோபால் வர்மா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும்,”பாலிவுட்டில் உள்ள சூப்பர் ஸ்டார் இயக்குநர்களும், சூப்பர் ஸ்டார் நடிகர்களும், பாகுபலி படத்தை பார்த்து பயந்துபோய் இருக்கின்றனர்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Director Ram Gopal Varma criticised Bollywood for Baahubali 2

அடுத்த செய்தி

டிரெண்டிங்