ஆப்நகரம்

என் படங்களை விமர்சகர்கள் புரிந்து கொள்ளவில்லை: இயக்குநர் ராம்!

கற்றது தமிழ் படம் முதலாகவே விமர்சகர்கள் என் படங்களை புரிந்து கொள்வதை விட, மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள் என இயக்குநர் ராம் கூறியுள்ளார்.

Samayam Tamil 9 Feb 2019, 2:06 pm
கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படத்தை தொடர்ந்து, இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `பேரன்பு'.
Samayam Tamil Director-Ram-Images-3-700x466


கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது. பி.எல். தேனப்பன் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம், பிப்ரவரி 1ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பேரன்பு படக்குழுவினருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தி வரும் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் இயக்குநர்கள் ராம், பா.ரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குனர் ராம் நன்றி தெரிவித்து பேசியதாவது; பேரன்பு திரைப்படத்தை ஒரு மாற்று சினிமாவாக நினைத்து எடுக்கவில்லை. அதனை ஒரு "மெயின்ஸ்ட்ரீம்" சினிமாவாகத் தான் எடுத்தேன். நான் மட்டுமல்ல, இப்படத்தின் தயாரிப்பாளரும் அப்படி நினைத்துதான் தயாரித்தார். நல்ல படங்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.

கற்றது தமிழ் படம் முதலாகவே விமர்சகர்கள் என் படங்களை புரிந்து கொள்வதை விட, மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள். எல்லோரும் ராம் பத்து வருடத்தில் நான்கு படங்களை மட்டுமே எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக பேசுகிறார்கள், உண்மையில் நான் கஷ்டப்படவே இல்லை. நான் பிறக்கும் போது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன். சினிமாவிற்காக நான் எதையுமே இழக்கவில்லை.

கேரளாவில் "பேரன்பு" திரைப்படத்தைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள் என்றால், அங்கு மெகா ஸ்டார் மம்முட்டி இருக்கிறார். அவரால் படம் குறித்த தகவல் வேகமாக பரவுகிறது, மக்கள் வருகிறார்கள். அதேபோன்று இங்கும் மக்கள் படத்தை பார்த்தால் என் தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைவார். என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்