ஆப்நகரம்

‘கயல்’ சந்திரனுடன் இணைந்துள்ள ராம்பாலா!

சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை இயக்கிய இயக்குனர் ராம்பாலா, தற்போது ‘கயல்’ சந்திரனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

Samayam Tamil 11 Feb 2019, 4:18 pm
சந்தானம் நடிப்பில் ராம் பாலா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. இந்தப் படத்தில் திகில், காமெடி என்று கலந்துகட்டி இருப்பதால் இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தை போலவே ஹாரர் காமெடி ஜானரில் இந்த படம் உருவாகியிருந்தது.
Samayam Tamil ram-bala-kayal


இந்நிலையில் இயக்குநர் ராம் பாலா தனது அடுத்த படத்தை துவக்கியுள்ளார். இந்தப் புதிய படத்திற்கு ‘டாவு’ என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்தில் ‘கயல்’ சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சு குரியன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார். படத்தை 2எம்பி புரடெக்ஷன் சார்பில் ரகுநான் பிஎஸ் தயாரித்துள்ளார். இந்த படமும் ஹாரர் ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்