ஆப்நகரம்

எழுவர் விடுதலைக்காக குரல் கொடுக்கும் இயக்குநர் ரஞ்சித்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என இயக்குநர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 8 Jun 2016, 11:42 am
முன்னாள் இந்திய பிரதமரான ராஜிவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன்,சாந்தன்,நளினி உட்பட ஏழு பேர் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
Samayam Tamil director ranjith raise voice for 7 tamils release
எழுவர் விடுதலைக்காக குரல் கொடுக்கும் இயக்குநர் ரஞ்சித்


இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறி வரும் 11-ஆம் தேதி வேலூர் சிறை வளாகம் முன்பிருந்து சென்னை கோட்டை வரை இருசக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ‘கபாலி’ திரைப்பட இயக்குநர் ரஞ்சித், பேரணியில் கலந்து கொள்ள மற்ற திரையுலகத்தினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் மிகப்பெரிய துயரமாக கருதுவது பேரறிவாளன் இன்னும் விடுதலையாகாமல் இருப்பதுதான்.

25-ஆண்டு கால சிறை வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் உணர்ந்திருப்போம். மனித நேயத்தின் பக்கம் நின்று இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும் .அவர் விரைவாக விடுதலையாக வேண்டும்.பேரறிவாளனின் விடுதலை என்பது தமிழ் சமூகத்தின் தேவையாக இருக்கிறது.

ஜீன் 11 அன்று நடைபெற உள்ள வாகனப்பேரணியில் நானும் பங்கேற்க உள்ளேன்.மனிதநேயத்தை வலியுறுத்தும் அனைவரும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இயக்குநர் ரஞ்சித் மட்டுமல்லாது, ’மூடர் கூடம்’ திரைப்பட இயக்குநர் நவீன், நடிகர் கலையரசன் ஆகியோரும் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்