ஆப்நகரம்

வடிவேலு vs அமலா பால்: வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்ட ஆடை இயக்குனர்!

அண்மையில் வெளியான ஆடை படத்தின் டீசரை வைத்து இயக்குனர் ரத்னகுமார் வடிவேலு வெர்ஷனில் வீடியோ வெளியிட்டதற்கு அமலா பாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Samayam Tamil 24 Jun 2019, 7:26 pm
மேயாத மான் படத்தின் புகழ் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. வீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.
Samayam Tamil mala.


இப்படத்தின் டீசருக்கு முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்தது. தொடர்ந்து அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் அமலா பால் ஆடையின்றி நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். எப்போது இப்படத்தின் டீசர் வெளியானதோ, அப்போதிலிருந்தே சமூக வலைதளத்திற்கு ஹாட் ஆப் தி டாப்பிக் எது என்றால், அது அமலா பாலின் ஆடை படம் தான். சும்மா டுவிட்டரையே கதிகலங்க வைத்தார்கள் நெட்டிசன்கள். எப்படி அமலா பால் இப்படி நடித்தார் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இப்படத்தின் இயக்குனரே ஆடை டீசருக்கு வடிவேலு வெர்ஷன் வெளியிட்டு பலரையும் அதிர்ச்சியடைச் செய்தார். பொதுவாக, ஒரு போஸ்டரோ, டீசரோ, டிரைலரோ வெளியானால், ரசிகர்கள் தான் வடிவேலு வெர்ஷன் வெளியிடுவார்கள். அப்படியிருக்கும் போது ஒரு படத்தின் இயக்குனரே தனது ஆடை படத்தின் டீசருக்கு வடிவேலு வெர்ஷன் வெளியிட்டு அமலா பாலை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இப்போதெல்லாம் எந்த ஒரு படத்திற்கும் வடிவேலு வெர்ஷன் வந்துவிடுகிறது. அப்படியிருக்கும் போது ஆடை படம் மட்டும் என்ன விதிவிலக்கா? இந்த வீடியோ பகிர்வதிலிருந்து என்னை நானே கட்டுப்படுத்த முடியவில்லை. ஆடை படம் முழுக்க முழுக்க சுதந்திரத்தைப் பற்றி பேசவுள்ளது. நான் பேச்சுரிமையை மதிக்கிறேன். மன்னிக்கவும் அமலா பால் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்