ஆப்நகரம்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Oct 2018, 1:17 pm
தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என கூறியுள்ளார்.
Samayam Tamil இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான்: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்!
இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான்: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்!


144 ஆண்டுகளுக்கு பிறகு, தாமிரபரணி மகா புஷ்கர விழா, நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் விழாவின் மூன்றாவது நாளான இன்று இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு, பாபநாசம் படித்துறையில் புனித நீராடினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தை பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான். 25 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் சீடராக உள்ளேன். மன மகிழ்வுக்கு ஜாதி, மத வேறுபாடின்றி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும்.

பாபநாசம் மிக முக்கியமான தலம். பாவங்களை போக்கும் அற்புத தீர்த்த கட்டம் இங்குள்ளது. உலகில் எந்த மூலையில் இருப்பவர்களும் ஒருமுறையாவது பாபநாசம் வரவேண்டும். 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடக்கூடிய தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் அவரது தந்தையாக கூறவில்லை. பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்