ஆப்நகரம்

எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை: அதிர்ச்சியில் ஷங்கர்!

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

Samayam Tamil 1 Feb 2021, 11:32 pm
எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் இதழில் ஜூகிபா என்ற கதை எழுதினார். 2007ம் ஆண்டு அதே கதையை திக் திக் தீபிகா என்ற தலைப்பில் நாவல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இந்த கதையை இயக்குனர் ஷங்கர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாக கூறி, அவர் மீது ஆரூர் தமிழ்நாடான் குற்றம் சாட்டினார்.
Samayam Tamil இயக்குனர் ஷங்கர்
இயக்குனர் ஷங்கர்


ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010ஆம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானது. இதை மறுத்து இயக்குனர் ஷங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் திரு.சாய் குமரன், நீதிமன்றத்தை இன்றுஅணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்.

இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது, அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நலம் விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது. இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என்று தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்