ஆப்நகரம்

விஜய் சேதுபதி நடிப்பு அற்புதம்: ஷங்கர் டுவீட்

பிரேம்குமாரின் இயக்கதில் வெளியான 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷாவை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 15 Oct 2018, 1:45 pm
பிரேம்குமாரின் இயக்கதில் வெளியான 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷாவை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.
Samayam Tamil Shankar_2.


இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, திரிஷா, தேவதர்ஷினி உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான படம் 96. இந்தப் படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


அதேபோல், இந்தப் படத்துடன் விஷ்ணுவிஷால், அமலாபால் நடிப்பில், ராம்குமார் இயக்கத்தில் ராட்சசன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு படங்கள் குறித்தும் இயக்குநர் ஷங்கர் தன் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர் ஷங்கர் செய்த டுவிட்டில் கூறியதாவது ‘96 திரைப்படம் பார்த்தேன். இந்த திரைப்படம் அனைவரின் வாழ்கையில் நடைபெற்ற சம்பவத்தை சார்ந்து அமைந்துள்ளதால், அனைவராலும் ரசிக்கப்படுகிறது. விஜய்சேதுபதியின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. திரிஷாவும் அற்புதமாக நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்