ஆப்நகரம்

எஸ்கலேட்டரில் தவறி விழுந்த ’ஒடியன்’ பட இயக்குநர் படுகாயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

கொச்சி: விமான நிலையத்தில் தவறி விழுந்த இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Samayam Tamil 20 Nov 2018, 1:11 pm
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன். இவர் விளம்பர படங்களுக்கு பெயர் போனவர். தற்போது மோகன்லால், பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர் உள்ளிட்டோரை வைத்து, ‘ஒடியன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
Samayam Tamil Shrikumar menon


பேண்டஸி திரில்லர் வகையிலான இப்படம், அடுத்த மாதம் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது மும்பை மற்றும் சென்னையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனது பட வேலைத் தொடர்பாக மும்பை சென்றிருந்தார்.

அங்கிருந்து கொச்சி திரும்ப, மும்பை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு எஸ்கலேட்டரில் ஏறும் போது, நிலை தடுமாறி தலைக்குப்புற கீழே விழுந்தார். இதனால் முகத்தாடையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாஅர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த இருவாரங்களுக்கு கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இவர் பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தைத் தழுவி எழுதிய ‘ரெண்டாமூழம்’ என்ற நாவலை படமாக்க உள்ளார். இது ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது.

இந்தப் படத்தில் மோகன்லால் பீமன் வேடத்தில் நடிக்கிறார். அவரது பார்வையில் மகாபாரதம் கதை விரிவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்