ஆப்நகரம்

ஆன்லைன் பயிற்சி வகுப்பு மூலம் கிடைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய சுசீந்திரன்!

ஆன்லைன் பயிற்சி வகுப்பு மூலம் கிடைத்த ரூபாய் 5 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

Samayam Tamil 21 Jun 2021, 2:50 pm
'வெண்ணிலா கபடிக் குழு' மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். இந்த வருடம் பொங்கல் தினத்தன்று இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த'ஈஸ்வரன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் தான் நடத்திய ஆன்லைன் வகுப்பு மூலமாக கிடைத்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண் நிதிக்கு வழங்கியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
Samayam Tamil உதயநிதி ஸ்டாலின்_சுசீந்திரன்
உதயநிதி ஸ்டாலின்_சுசீந்திரன்


அண்மையில் இயக்குனர் சுசீந்திரன், வருகின்ற ஜூன் 14ஆம் தேதி திரைப்பட உலகில் உதவி இயக்குநர்களாக வேலை செய்பவர்களுக்கும், உதவி இயக்குநராக வேண்டும் என முயற்சி செய்பவர்களுக்கு மற்றும் நடிகர்களாக நடித்து கொண்டிருப்பவர்களுக்கும், நடிகர்களாக முயற்சி செய்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் படி திரைப்பட ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கிறோம் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என அறிவித்திருந்தார்.

மேலும், இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். நான் அடுத்து இயக்கும் திரைப்படங்களில் உதவி இயக்குனர், நடிகர்களின் நேர்காணல் நடைபெறும் போது இந்த வகுப்பின் சான்றிதழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். இந்த வகுப்பின் மூலமாக வரும் முழு பணத்தையும் கொரோனா தடுப்பு தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்கப்படும் என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் இயக்குனர் சுசீந்திரன்.

தாய்ப்பறவை போல் செயல்படும் அரசு: தமிழ்நாடு அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா புகழாரம்!
அதன்படி, ஜூன் 14 முதல் திரைப்படத் தயாரித்தல் மற்றும் நடிப்பு ஆகியவற்றுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் கிடைத்த பணம் ரூபாய் 5 லட்சத்தை கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் சுசீந்திரன். இதற்காக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினினை நேரில் சந்தித்து ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த கே.வி.மோதிக்கும், இதை சாத்தியமாக்கிய உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்