ஆப்நகரம்

Sudha Kongara : சூர்யா நமது நாட்டின் மிகச் சிறந்த நடிகர்: இயக்குனர் புகழாரம்!

நடிகர் சூர்யா, நமது நாட்டின் மிகச் சிறந்த நடிகர் என்று பிரபல இயக்குனர் சுதா கொங்காரா புகழாரம் சூட்டியுள்ளார்.

Samayam Tamil 22 Apr 2019, 2:55 pm
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தமிழில் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே.’ படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து முடிந்தது.
Samayam Tamil suriya-sudha


மேலும் இந்தப் படத்தை அடுத்து நடிகர் சூர்யா கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ‘காப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவின் 37வது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

அடுத்ததாக நடிகர் சூர்யா, தனது 38வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே ‘இறுதி சுற்று’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர். தற்போது சூர்யாவை வைத்து இவர் இயக்கி வரும் படத்திற்கு ‘சூறரை போற்று’ என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
Suriya38 Title Poster: செம்ம மாஸா டைட்டில் வைத்த சுதா கொங்கரா: கம்பீரமா வெளியான சூர்யா38 டைட்டில் போஸ்டர்!
இந்நிலையில் இயக்குனர் சுதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘நமது நாட்டின் மிக சிறந்த நடிகர் சூர்யாதான்’’ என்று கூறியுள்ளார். இவர் கூறியது சூர்யா ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்