ஆப்நகரம்

கால்பந்தாட்டத்தை கையிலெடுக்கும் சுசீந்திரன்!

இயக்குனர் சுசீந்திரன், கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

Samayam Tamil 1 Apr 2018, 10:35 pm
இயக்குனர் சுசீந்திரன்,கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
Samayam Tamil susee


பாண்டிய நாடு, ‘நான் மகான் அல்ல, ‘ஆதலால் காதல் செய்வீர் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் ‘வெண்ணிலா கபடி குழு, ஜீவா திரைப்படத்தில் கபடி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளை மையமாக வைத்து படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் புது முகங்களை வைத்து ’ஏஞ்சலினா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகிறது.

இதையடுத்து, கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று எடுக்க உள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக ரோஷன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்னு நடிக்கவுள்ளார் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்