ஆப்நகரம்

Ajith: வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு... தல அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன்

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ராஜபாட்டை, மாவீரன் கிட்டு, ஜீனியஸ் ஆகிய படங்களை இயக்கியவர் சுசீந்திரன். தற்போது சுசீந்திரன் போட்டுள்ள டுவிட் அஜித் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 17 Mar 2019, 12:56 pm

ஹைலைட்ஸ்:

  • இயக்குனர் சுசீந்திரன் அஜித்தை அரசியலுக்கு அழைத்து டுவிட் செய்துள்ளார்.
  • இதற்கு அரசியல் வேண்டம் அஜித்தே போதும் என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Ajith
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ராஜபாட்டை, மாவீரன் கிட்டு, ஜீனியஸ் ஆகிய படங்களை இயக்கியவர் சுசீந்திரன். தற்போது சுசீந்திரன் போட்டுள்ள டுவிட் அஜித் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் சுசீந்திரனின் டுவிட்டில், “40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம்.

வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு ... உங்களுக்காக காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்...” என இயக்குனர் சுசீந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அரசியல் வேண்டம் அஜித்தே போதும்:
மக்களவை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் இயக்குனர் சுசிந்திரன் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் வகையில் போட்டுள்ள டுவிட் பெரிய தாக்கத்தை ஏற்பட்டுள்ளது.

அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்! டுவிட்டரில் டிரெண்டாக்கிய அஜித் ரசிகர்கள்!!

இவரின் டுவிட் தொடர்ந்து அஜித் ரசிகர்கள், ‘அரசியல் வேண்டம் அஜித்தே போதும்’ என்ற ஹேஸ் டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


பலர் ஆதரவு தெரிவித்தும், பலர் அரசியல் வேண்டாம் சாதாரண நடிகராக இருக்க ஆசை என அஜித் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்து வருகின்றனர்.


முன்னதாக 2017ம் ஆண்டே அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என சுசீந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்