ஆப்நகரம்

இவர்தான் நாட்டை வழிநடத்தனும்- இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறுவது இவரைத்தான்!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சந்திக்கும் கனவு இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு தற்போது நிறைவேறியுள்ளது.

Samayam Tamil 11 Nov 2018, 1:59 am
இயக்குநர் விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் கனவான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சந்திக்கும் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
Samayam Tamil இவர்தான் நாட்டை வழிநடத்தனும்- இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறுவது இவரைத்தான்!!
இவர்தான் நாட்டை வழிநடத்தனும்- இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறுவது இவரைத்தான்!!


இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், அவர் தற்போதும் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுதவிர, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்.

அந்த வகையில், தமிழ் திரைப்பட இயக்குநரான விக்னேஷ் சிவனும் அவரின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். தோனியை தனது முன்னோடியாக கருதும் அவர், தனது சமூக வலைத்தளங்களில் அவர் குறித்து பல்வேறு பதிவுகளைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், அவர் தோனியை நேரில் சந்தித்துள்ளார். இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தோனியை சந்திப்பது எனது வாழ்நாள் கனவு. எனது வாழ்வின் மிகவும் சந்தோஷமான மன நிறைவான நாள். இதற்கு காரணமான கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி. ஒருநாள் இவர் நம் நாட்டை வழிநடத்துவதைப் பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்