ஆப்நகரம்

காதலி நயன்தாராவை வாழ்த்தி ட்விட் செய்த இயக்குநர் விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா திரையுலகில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அவரை வாழ்த்தி இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ட்விட் செய்துள்ளனர்

TNN 27 Dec 2017, 10:47 am
நடிகை நயன்தாரா திரையுலகில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அவரை வாழ்த்தி இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ட்விட் செய்துள்ளனர்.
Samayam Tamil director vignesh sivan wished actress nayanthara for completing 14 years in film industry
காதலி நயன்தாராவை வாழ்த்தி ட்விட் செய்த இயக்குநர் விக்னேஷ் சிவன்!


இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘நானும் ரௌடிதான்’. விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படப்பிடிப்பின் போது, நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதன்பின், இவர்கள் இவிருவரும் ஜோடியாக இருக்கும் படங்கள் அவ்வப்போது சமூகவலைத் தளங்களில் வெளியாகின.

இந்நிலையில், நடிகை நயன்தாரா திரையுலகில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “உங்களுக்கு மேலும் சக்தியும் வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகள். கடவுளின் அருளுடன் இந்த அழகாக உள்ளது. ஒரு அழகான கிறிஸ்துமஸ் தினமாக இன்று உள்ளது. அடுத்த பாடல் பீலா பீலா, பாடல் டீசர் மற்றும் நிறைய வந்து கொண்டே இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
#14YearsOfNayanism 😍😍😍 Wishing more power & victories to u #Nayanthara Keep it going 😇😍 A lovely day with a lot of God's grace:) 'Twas a beautiful Christmas Day! Loads of positivity ! Loads of Love for #PeelaPeela 😍😇 Next singles, song teasers&a lot more cumin #TSK pic.twitter.com/z19NusqQz8 — Vignesh ShivN (@VigneshShivN) December 25, 2017 இந்தப் பதிவில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போன்ற படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்