ஆப்நகரம்

‘விசுவாசம்’ படத்தை அடுத்து அஜீத்துடன் இணையும் தீரன் பட இயக்குனர்!

நடிகர் அஜீத் ‘விசுவாசம்’ படத்தை அடுத்து ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 2 Mar 2018, 11:04 am
நடிகர் அஜீத் ‘விசுவாசம்’ படத்தை அடுத்து ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil director vinoth will join with ajith
‘விசுவாசம்’ படத்தை அடுத்து அஜீத்துடன் இணையும் தீரன் பட இயக்குனர்!


நடிகர் அஜீத், சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய இயக்குனர் வினோத், ‘விவேகம்’ படத்திற்கு முன்பாகவே அஜீத்தை சந்தித்து ஒரு கதை சொன்னாராம். கதை அஜீத்துக்கு பிடித்துப் போய் அவர் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியதாக தகவல்கள் தெரிகிறது. இதனால் ‘விசுவாசம்’ படம் முடிந்தவுடன் அஜீத் & வினோத் கூட்டணி இணையும் என்று தெரிகிறது. மேலும், தற்போது இப்படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்