ஆப்நகரம்

நயன்தாராவுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் பல இயக்குனர்கள்!

நயன்தாராவுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் பல இயக்குனர்கள்!

TOI Contributor 6 Dec 2016, 2:24 am
நயன்தாராவிடம் கதை சொல்லிவிட்டு அவரது கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
Samayam Tamil directors waiting for nayantharas call sheet
நயன்தாராவுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் பல இயக்குனர்கள்!


நயன்தாரா நடித்தாலே அந்தப் படம் வெற்றிப்படமாக அமையும் என பலரும் கருதி அவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கின்றனர். ஆனால் அவரோ, முதலில் கதை. அது பிடித்து விட்டால்தான் சம்பளம், கால்சீட் பற்றியே பேசுவேன் என்று கராராக சொல்லிவிட்டுத்தான் கதையை கேட்கிறார். அதுவும் முன்பெல்லாம் தான் கேட்டு பின்னர் தனது முக்கியமானவர்களிடம் கலந்து பேசி முடிவெடுப்பார் நயன்தாரா.

ஆனால் தற்போது கதை சொல்லும் வரும் இயக்குனர்களை, முதலில் விக்னேஷ் சிவனிடம் அனுப்பி விடுகிறார். நயன்தாரா கால்ஷீட் கிடைக்க விக்வேஷ் சிவனை துரத்துகிறார்கள். நயன்தாரா கதை கேட்டு ஓகே சொன்ன படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் புதிதாக படத்திற்காக வருபவர்களிடம், தற்போது நான் ‘டோராட’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர்காலம்’ என நான்கு படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களை முடித்த பிறகுதான் உங்களுக்க கால்சீட் கிடைக்கும். அதுவும் நான் கொடுக்கும் தேதியில்தான் நீங்கள் படத்தை ஆரம்பிக்கமுடியும் என்று கூறியுள்ளார் நயன்தாரா. இருப்பினும், பல இயக்குனர்கள் நயன்தாராவின் கதை சொல்லிவிட்டு அவரது கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்