ஆப்நகரம்

‘டிஸ்ஷூம்’ நான்கு நாளில் வசூல் 42 கோடி!

‘டிஸ்ஷூம்’ படத்தின் வசூல் நான்கு நாட்களில் 42 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

TOI Contributor 3 Aug 2016, 1:40 pm
‘டிஸ்ஷூம்’ படத்தின் வசூல் நான்கு நாட்களில் 42 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil dishoom film has collected rs 42 crores in 4 days
‘டிஸ்ஷூம்’ நான்கு நாளில் வசூல் 42 கோடி!


இயக்குனர் ரோகித் தவான் இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ், அக்ஷ்ய் கண்ணா நடிப்பில் கடந்த வெள்ளியன்று (ஜூலை 29-ம் தேதி) வெளியான ஆக்ஷ்ன் படம் ‘டிஸ்ஷூம்‘. இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் நன்றாகவே இருப்பதாக பாலிவுட் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.42.17 கோடி வசூலித்திருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் ரூ.11.05 கோடியும், 2-ம் நாளில் 12.02 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.14.25 கோடியும், 4-ம் நாளில் ரூ.4.85 கோடியும் வசூலித்திருக்கிறது. படத்திற்கு வசூல் சிறப்பாகவே இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று விநியோக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்