ஆப்நகரம்

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு தரவேண்டாம்- எச்சரிக்கும் பிரபல இயக்குநர்..!!

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அது தமிழ் சினிமாவில் தவறான உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Aug 2018, 10:22 am
ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அது தமிழ் சினிமாவில் தவறான உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sri-leaks-cover-pic
ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரவேண்டாம்- கோலிவுட்டில் ஒரு கோரிக்கை


தெலுங்கு திரைப்பட உலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி.

அதை தொடர்ந்து தமிழ் சினிமாவை டார்கெட் செய்து இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இவரது இந்த நடவடிக்கைக்கு நடிகரும் இயக்குநருமான வாராகி அவர் மீது விபச்சார வழக்குப் பதிவு செய்து மனு அளித்தார். தற்போது இதுதொடர்பாக அவர் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதில் பாலியல் துன்புறத்தல்கள் என்று பொய் குற்றச்சாட்டை எழுப்பி ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்களை மிரட்டி திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற நினைக்கிறார்.

இப்படிப்பட்டவர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால், அது தமிழ் திரையுலகத்தில் தவறான உதாரணமாக அமைந்துவிடும். அதன்பின் ஸ்ரீரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்களுக்கு பாரம்பரியமான தமிழ் சினிமாவில் ஊக்கம் கொடுப்படு போலாகிவிடும்.

இதை தனிநபரின் கோரிக்கையாக இல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் கோரிக்கையாக பார்க்க வேண்டும் என வாராகி கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்