ஆப்நகரம்

‘டோரா’படத்தால் ஆரா சினிமாஸ் நிறுவனம் அதிர்ச்சி!

நயன்தாரா நடித்த ‘டோரா’படத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் என்ன செய்வது என்று படத்தை வாங்கிய ஆரா சினிமாஸ் நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது.

TNN 5 Mar 2017, 8:48 pm
நயன்தாரா நடித்த ‘டோரா’படத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் என்ன செய்வது என்று படத்தை வாங்கிய ஆரா சினிமாஸ் நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது.
Samayam Tamil dora film distributor is in a dilemma
‘டோரா’படத்தால் ஆரா சினிமாஸ் நிறுவனம் அதிர்ச்சி!


நயன்தாரா நடிப்பில் சற்குணம் தயாரிப்பில் உருவான டோரா மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாயா படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடித்துள்ள இந்த பேய் படத்தை புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தை தயாரிப்பாளர் நேமிசந்தி ஜபக்குக்கு முதல் பிரதி அடிப்படையில் சற்குணம் தயாரித்து கொடுத்திருக்கிறார். தினேஷ் ஒளிப்பதிவு செய்து வந்த இப்படத்துக்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளார்கள்.

தம்பி ராமையா மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நயன்தாராவுடன் கார் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டோரா படத்தின் டீஸருக்கு வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தன்னுடைய ‘அலிபாபாவும் அற்புதகாரும்’ படத்தின் கதையை காப்பியடித்து டோரா படத்தை எடுத்திருப்பதாக குற்றம்சாட்டினார் சாட்டிலைட் ஸ்ரீதர் என்ற புதுமுக இயக்குநர்.

தற்போது மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து டோரா படத்துக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாட்டிலைட் ஸ்ரீதர்.

டோரா படத்துக்கு திடீரென இப்படியொரு சிக்கல் ஏற்பட்டிருப்பதால் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிய ஆரா சினிமாஸ் நிறுவனம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

ஒருவேளை ‘டோரா’ படத்துக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் விநியோக உரிமையை திருப்பிக் கொடுத்துவிடலாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

#Nayanthara news: Dora film distributor is in a dilemma.

அடுத்த செய்தி

டிரெண்டிங்