ஆப்நகரம்

மோகன்லாலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!

ஐக்கிய அரபு நாடுகளில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையை மோகன் லால் நடித்த ‘திரிஷ்யம்’ படம் பெற்றுள்ளது.

TNN 12 Feb 2017, 1:07 pm
ஐக்கிய அரபு நாடுகளில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையை மோகன் லால் நடித்த ‘திரிஷ்யம்’ படம் பெற்றுள்ளது.
Samayam Tamil drishayam is the longest running film in uae
மோகன்லாலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!


மோகன் லால்,மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘திருஷ்யம்’ திரைப்படம் கேரளாவில் மெகா ஹிட்டானது.இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் கேரள மக்கள் அதிகமாக வசித்து வரும் ஐக்கிய அரபு நாடுகளில் திரிஷ்யம் திரைப்படம் சர்வதேச சாதனை ஒன்றை படைத்துள்ளது.இதுவரை ஐக்கிய அரபு நாடுகளில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையை ‘திரிஷ்யம்’ திரைப்படம் தற்போது பெற்றுள்ளது.

திரிஷ்யம் திரைப்படம் 125 நாட்கள் ஐக்கிய அரபு நாடுகளில் தொடர்ந்து ஓடியுள்ளது.மேலும் மோகன் லாலின் மற்றொரு படமான ‘புலி முருகன்’ ஐக்கிய அரபு நாடுகளில் 98 நாட்கள் ஓடி,37.09 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது.பல ஆஸ்கர் விருதுகளை பெற்று,உலகம் முழுவதும் வசூலில் சாதனை புரிந்த ‘டைட்டானிக்’ திரைப்படம் ஐக்கிய அரபு நாடுகளில் 110 நாட்கள் மட்டுமே ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Drishayam is the longest running film in UAE

அடுத்த செய்தி

டிரெண்டிங்