ஆப்நகரம்

போதைப் பொருள்: மருத்துவ பரிசோதனையை எதிர்த்த நடிகை சார்மியின் மனு விசாரணை!!

போதைப் பொருள் தொடர்பான வழக்கில், மருத்துவ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த சார்மி ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

TNN 25 Jul 2017, 1:52 pm
போதைப் பொருள் தொடர்பான வழக்கில், மருத்துவ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த சார்மி ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
Samayam Tamil drug case the petition filed by charmi kaur is coming up for hearing today
போதைப் பொருள்: மருத்துவ பரிசோதனையை எதிர்த்த நடிகை சார்மியின் மனு விசாரணை!!


தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு ஆகிய 12 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்த முடிவு செய்தது.

இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர்கள் தருண், பி.சுப்புராஜூ, நவ்தீப் உள்ளிட்டோர் விசாரணை குழுவின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர். வரும் புதன் அன்று சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை குழு முன்பு நடிகை சார்மி விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இந்நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.

போதைப்பொருள் வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக்குழு முறையாக விசாரணை நடத்துவது இல்லை என சார்மி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

மேலும் விசாரணைக்கு ஆஜராகுபவர்களை கட்டாயப்படுத்தி ரத்தம், தலைமுடி, நகங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சேகரிக்கின்றனர். இது போன்ற மருத்துவ பரிசோதனைக்கு விலக்கு கோரி சார்மி வழக்கு தொடுத்துள்ளார். மேலும் சார்மி விசாரணைக்கு வரும்போது தனது வழக்கறிஞரையும் உடன் அழைத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விசாரணையின்போது பெண் அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் என்றும் தனது மனுவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

drug case: the petition filed by charmi kaur is coming up for hearing today

அடுத்த செய்தி

டிரெண்டிங்