ஆப்நகரம்

‘தல’ பாட்டுக்கு தாறுமாறா ‘டான்ஸ்’ ஆடிய ஸ்ருதிஹாசன்!

அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு துல்கர்சல்மானுடன், ஸ்ருதிஹாசன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Samayam Tamil 2 Mar 2018, 3:27 pm
அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு துல்கர்சல்மானுடன், ஸ்ருதிஹாசன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Samayam Tamil dulquer salmaan and shruti hassan shake legs together
‘தல’ பாட்டுக்கு தாறுமாறா ‘டான்ஸ்’ ஆடிய ஸ்ருதிஹாசன்!


2018-ம் ஆண்டுக்கான வனிதா விருதுகள் வழங்கும் விழா கேரளாவில் நடந்தது. இதில் முன்னணி நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.

ஸ்ருதிஹாசன் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறந்த நடிகராக துல்கர்சல்மான் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு ஸ்ருதிஹாசன் விருது வழங்கினார்.

அப்போது துல்கர்சல்மானும், சுருதிஹாசனும் இணைந்து பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு இருவரும் சம்மதித்தனர்.

இதையடுத்து அஜித்தின் ‘வேதாளம்‘ படத்தில் இடம் பெற்ற ‘ஆலுமா டோலுமா...’ பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி அசத்தினார்கள்.


அஜித் பாடலுக்கு ஸ்ருதிஹாசன் ஆடிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்