ஆப்நகரம்

Dear Comrade: விஜய் சேதுபதி குரலில் வைரலாகும் பாடல்!!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தில் விஜய் சேதுபதி பாடியுள்ள பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 19 Jul 2019, 7:00 pm
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பாரத் கம்மா இயக்கியுள்ள தெலுங்கு படம் ‘டியர் காம்ரேட். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். கீதா கோவிந்தம் படத்திற்கு மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவும்,ராஷ்மிகாவும் நெருக்கமாக நடித்திருந்தார்கள். அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக எல்லோராலும் பேசப்பட்டது. இப்போது டியர் காம்ரேட் படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார்கள். முத்தக்காட்டியிலும் நடித்துள்ளார்கள்.
Samayam Tamil song


Ajith: நேர்கொண்ட பார்வையின் வியாபாரம் இத்தனை கோடியா?

டியர் காம்ரேட் நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். மைத்ரி மூவீஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
கோபமான கம்யூனிஸ்ட் சிந்தனை உள்ள இளைஞனின் காதல் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஜூலை 26-ந்தேதி வெளியாகவுள்ளதுஇந்த படத்தின்புரொமோ‌ஷன் பணிகளில் விஜய் தேவரகொண்டாவும் , ராஷ்மிகா மந்தனாவும் முக தீவிரக ஈடுபட்டு வருகின்றனர்.
Manmadhudu 2: யார், என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை: ரகுல் ப்ரீத் சிங்!

இப்படத்தை பிர்தபலபடுத்தும் பொருட்டு ஒரு ஆன்ந்தம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ‘காம்ரேட் ஆன்தம்’ என்ற இந்தப்பாடல் நான்கு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. பாடலின் தமிழ் வெர்‌ஷனை ,விஜய் சேதுபதி பாடியுள்ளார். இப்பாடல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும் இப்பாடலை பாடியுள்ளனர்.

Suriya: வெளிநாடு வியாபாரதில் பட்டைய கிளப்பிய சூர்யாவின் காப்பான்: எத்தனை கோடி தெரியுமா?

மேலும் ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோர் எழுதிஉடன் பாடியிருக்கின்றனர். வா ஒன்னா சேரலாம் வா என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் துடிப்பான இசை மற்றும் வரிகளுடன் நம்மை ஈர்க்கும் படி உள்ளது. முன்னதாக விஜய் தேவரகொண்டா இப்பாடல் பாடியதற்காக விஜய் சேதுபதியை பத்திரிகையாளர் சந்திப்பில் புகழ்ந்து தள்ளினார். அவருடன் இணைந்து நடிக்க விருப்பமுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்