ஆப்நகரம்

விஸ்வரூபம் எடுத்து சல்மான் கானுடன் விளையாடிய கமல் ஹாசன்!

சல்மான் கான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கமல் கலந்துகொண்டு விளையாடினார்.

Samayam Tamil 17 Jul 2018, 5:41 pm
சல்மான் கான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கமல் கலந்துகொண்டு விளையாடினார்.
Samayam Tamil Mastersalman-khan-kamal-haasan4


கமல் ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான விளம்பர வேலைகளில் கமல் முழுவீச்சுடன் ஈடுபட்டுள்ளார்.

விஸ்வரூபம் 2 படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகின்றது. இந்தி பதிப்பின் விளம்பரம் செய்யும் வேலையை சல்மான் கான் செய்து வருகின்றார்.



சல்மான் கான் நிகழ்ச்சியில் கமல் :
சல்மான் கான் தொகுத்து வழங்கும் தஸ் கா தம் எனும் விளையாட்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில், விஸ்வரூபம் 2 படத்தில் நடித்த கதாநாயகி பூஜா குமாருடன் கமல் கலந்து கொண்டார்.


பொழுதுபோக்கு வினாவிடை விளையாட்டு நிகழ்ச்சியில் கமல் பங்கேற்பது இதுவே முதன் முறை. இந்த நிகழ்ச்சியின் போது சல்மான் கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்