ஆப்நகரம்

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்னதியின் தற்போது நிலைமையைப் பாருங்கள்!

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’யில் குடும்பப் பெண்ணாக வந்த அபர்னதி தற்போது மார்டன் பெண்ணாக வந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 11 Aug 2018, 5:59 pm
‘எங்க வீட்டு மாப்பிள்ளை’யில் குடும்பப் பெண்ணாக வந்த அபர்னதி தற்போது மார்டன் பெண்ணாக வந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil Aparnathi


பிரபல தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற பெயரில் நடிகர் ஆர்யாவுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவியை தேடும் படலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. கடைசியில் இதில் கலந்து கொண்ட எந்தப் பெண்ணையும் ஆர்யா மணமுடிக்கவில்லை.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவர் அபர்னதி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அபர்னிதி குடும்பபாங்கான பெண்ணாக தான் காட்சியளித்தார். தற்போது ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது ஆளே மாறி பட்டணத்து மார்டன் பெண்ணாக காட்சியளிக்கிறார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்