ஆப்நகரம்

‘மெர்சல்’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எடிட்டர் ரூபன்!

‘மெர்சல்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடவுள்ளதாக வந்த செய்திக்கு எடிட்டர் ரூபன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

TNN 26 Oct 2017, 3:43 pm
‘மெர்சல்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடவுள்ளதாக வந்த செய்திக்கு எடிட்டர் ரூபன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Samayam Tamil editor ruben stopped the mersal rumours
‘மெர்சல்’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எடிட்டர் ரூபன்!


அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. இப்படத்தில் வரும் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்தார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகி அடங்கியுள்ளது. இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்ட காட்சிகள் மீண்டும் இணைக்கப்படும் என்று எடிட்டர் ரூபன் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து எடிட்டர் ரூபன் கூறுகையில் ‘‘மெர்சல்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. படத்தின் நீளம் கருதி சில பாடல்களும், நகைச்சுவை காட்சிகளும் நீக்கப்பட்டது. இப்போதைக்கு நீக்கப்பட்ட எந்த காட்சிகளும், பாடல்களும் படத்தில் இடம்பெறப்போவதில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்