ஆப்நகரம்

தீபாவளிக்கு வெளியாகிறது எனை நோக்கி பாயும் தோட்டா

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது.

Samayam Tamil 5 Sep 2018, 7:41 am
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது.
Samayam Tamil ENPT Team


கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கடந்த ஜனவரி மாதம் சா்காா், என்.ஜி.கே., சண்டக் கோழி 2, விஸ்வாசம் என 4 படங்கள் தீபாவளிக்கு வருவதாக அறிவித்தனா். ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு படமாக அந்த தேதியில் இருந்து மாறி வருகிறது.

விஸ்வாசம் படம் பொங்கலுக்கும், சண்டக் கோழி 2 ஆக்டோபா் 18ம் தேதியும் வெளியாகும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் என்.ஜி.கே. திரைப்படம் தீபாவளியில் இருந்து தள்ளிப்போகும் என்று தொிவிக்கப்பட்டது. இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.


படத்தில் இயக்குநா் சசிக்குமாா் தனுஷ்க்கு அண்ணனாக நடித்துள்ளாா். இரண்டு வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்