ஆப்நகரம்

திரைப்பட கேளிக்கை வரி 10%ல் இருந்து 8%மாக குறைப்பு!!

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை தமிழக அரசு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்து இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் இன்று தெரிவித்தார்.

TOI Contributor 13 Oct 2017, 2:59 pm
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை தமிழக அரசு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்து இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் இன்று தெரிவித்தார்.
Samayam Tamil entertainment tax has been reduced from 10 to 8 says actor vishal
திரைப்பட கேளிக்கை வரி 10%ல் இருந்து 8%மாக குறைப்பு!!


தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இத்துடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதனால், திரைத்துறை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறி கடந்த மாதம் தியேட்டர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரி மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டு 10 சதவீதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், புதிய படங்களுக்கு 10%, மற்ற திரைப்படங்களுக்கு 20% கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட படங்களுக்கு 7 சதவீத கேளிக்கை வரியும், மற்ற மொழி திரைப்படங்களுக்கு 14 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பேட்டியளித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், ‘’திரையரங்குகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். மல்டிப்ளக்ஸ் வளாகங்களில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்க வேண்டும். தண்ணீர் கொண்டு வர ரசிகர்களுக்கு அனுமதி தேவை. திரையரங்குகளில் அம்மா தண்ணீர் பாட்டில் விற்க அனுமதிக்க வேண்டும். கேண்டீன்களில் விற்கப்படும் பொருட்களில் எம்ஆர்பி விலை மட்டுமே வாங்கவேண்டும். மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் குறைந்தது 50 முதல் அதிகபட்சமாக 150 ரூபாய் கட்டணமே வசூலிக்க வேண்டும்’’ என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்து இருந்தார்.

இந்த வரி விதிப்பால் தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 25 சதவீதம் விலை அதிகரிக்கலாம் என்று தமிழக அரசே கூறி இருந்த நிலையில், இந்த டிக்கெட் உயர்வு போதாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

இன்னும் தமிழகத்தில் மல்டி பிளக்ஸ் தியேட்டர் முதல் மற்ற தியேட்டர்களில் டிக்கெட் விலை என்ன என்பது இன்னும் நிர்ணயிக்கப்படாமல் குழப்பம் நிலவி வருகிறது.


Entertainment tax has been reduced from 10 to 8% says actor vishal

அடுத்த செய்தி

டிரெண்டிங்