ஆப்நகரம்

விஸ்வாசம் டிவியில் ஒளிபரப்பினாலே, புது பட ரிலீஸ் போல இருக்கு! நெகிழ்ச்சியான பிரபலம்

நேற்று மூன்றாவது முறையாக விஸ்வாசம் படம் டிவியில் ஒளிபரப்பான நிலையில், அது புது பட ரிலீஸ் போல இருந்ததாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Jul 2020, 9:43 am
தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவானது விஸ்வாசம் படம். இதில் அஜித்தின் மனைவியாக நயன்தாரா மற்றும் மகளாக அனிகா ஆகியோர் நடித்திருந்தனர். அப்பா - மகள் செண்டிமெண்ட்டை மையப்படுத்தி கதை இருந்ததால் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை ஈட்டியது இந்தப் படம்.
Samayam Tamil Ajith in Viswasam


இந்நிலையில் நேற்று விஸ்வாசம் படத்தினை மூன்றாவது முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி உள்ளனர். அதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி உள்ளனர். #ViswasamTRPHuntOnSunTV என்ற ஹாஸ் டாக் ட்ரெண்ட் ஆனது.

மேலும் படத்தினை குடும்பமாக மீண்டும் பார்த்து ரசித்ததாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிக அளவில் பலரும் பார்த்துவிட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. இப்படி மூன்றாவது முறையாக டிவியில் ஒளிபரப்பும் போதும் கிடைத்து வரும் பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பற்றி தற்போது படக்குழுவினர் பலரும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

இசையமைப்பாளர் டி.இமான் பதிவிட்டுள்ள ட்விட்டில் "விஸ்வாசம் படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பாகும் போதும், அது புது பட ரிலீஸ் போலவே இருக்கிறது. அதற்கு அதிக அளவில் பாசிட்டிவ் மற்றும் அன்பு கிடைக்கிறது. படத்தில் வரும் ஒவ்வொரு பாடல் மற்றும் பிஜிஎம் ஆகியவற்றுக்கு அதிக பாராட்டு கிடைக்கிறது. இப்படி ஒரு படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தந்த இயக்குனர் சிவா சார், தயாரிப்பாளர் தியாகராஜன் சார், மற்றும் நம் டியர் அஜித் சார் ஆகியோருக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.


மேலும் பாடலாசிரியர் அருண்பாரதி பதிவிட்டுள்ள ட்விட்டில் விஸ்வாசம் படம் தற்போது வெளியானது போல மக்கள் கொண்டாடுகிறார்கள் என வியந்து கூறியுள்ளார். "#விஸ்வாசம் சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டுதான் வெளியானதா? என குழப்பமே வந்து விட்டது. ஒவ்வொரு முறை தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் போதும் நேற்றுதான் படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடுவதும், தொலைபேசியில் அழைத்து பாராட்டுவதும் மிகுந்த உற்சாகம் தருகிறது. அன்பு நன்றிகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.


விஸ்வாசம் படம் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி இருந்தது. விஸ்வாசம் வெளியான அதே நாளில் தான் ரஜினியின் பேட்ட படமும் வெளியாகியிருந்தது. இரண்டு டாப் ஹீரோக்களின் பிரம்மாண்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோதிக் கொண்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் விஸ்வாசம் படம் தான் முதலிடம் பிடித்தது. பாக்ஸ் ஆபீஸில் அதிக அளவு வசூலை ஈட்டியாது அது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்தின் வசூல் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகம் இருக்கும் என தயாரிப்பாளர் தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

விஸ்வாசம் படம் நேற்று டிவியில் ஒளிபரப்பான போது ரசிகர்கள் அதை உணர்ச்சி பொங்க பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தில் வரும் அப்பா சென்டிமென்ட் காட்சி பற்றி குறிப்பிட்டு அதிகம் பேர் பேசி வருகின்றனர். கிளைமாக்ஸ் காட்சியில் அஜித்தை அனிகா அப்பா என அழைக்கும் காட்சியை பார்த்துவிட்டு பெண் ஒருவர் கண்ணீர் சிந்தும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.


மேலும் விஸ்வாசம் படம் சமீபத்தில் மலேசியாவில் தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி உள்ளது. கொரோனா லாக் டவுனுக்கு பிறகு அங்கு தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த படம் வெளியிடப்பட்டு உள்ளது. அதையும் தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்