ஆப்நகரம்

எழில் மற்றும் உதயநிதி படம் நாளை படப்பிடிப்பு ஆரம்பம்!

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது.

TNN 22 Aug 2016, 5:31 pm
எழில் இயக்கத்தில் உதயநிதி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆகியும், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை நாளை முதல் தொடங்கவிருக்கின்றனர். இதனை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் காமெடி வேடத்தில் சூரி நடிக்கவிருக்கிறார். உதயநிதி-சூரி இணையவிருக்கும் முதல் படம் இதுதான். இந்த படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவிருக்கும் படத்திலும் சூரி நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil ezhil and udhayanidhi stalin movie shooting start tomorrow
எழில் மற்றும் உதயநிதி படம் நாளை படப்பிடிப்பு ஆரம்பம்!


படத்தில் ரெஜினா, சிருஷ்டி டாங்கே என இரண்டு பேர் இப்படத்தின் கதாநாயகிகளாக தேர்வாகியுள்ளார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். எழில் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ .அதேபோல், உதயநிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘மனிதன்’. இந்த இரண்டு படங்களுமே மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்