ஆப்நகரம்

'மாலிக்' வேடத்தில் உருமாறிய ஃபகத் பாசில்!

ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் மாலிக்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Dec 2020, 11:32 pm
மலையாளத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாலிக்' திரைப்படம் அம்மொழியில் 2021 மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil மாலிக் திரைப்படம்
மாலிக் திரைப்படம்


மலையாளம், தமிழில் பல்வேறு படங்களை இயக்கிய பாசிலின் மகனான ஃபகத் பாசில் மலையாளத்தில் பல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'ட்ரான்ஸ்' படம் இந்திய பனோரமாவில் தேர்வாகியுள்ளது.

'மகஷிண்டே பிரதிகாரம்', 'கும்பலங்கி நைட்ஸ்' போன்ற மலையாள படங்களில் அசத்திய ஃபகத் பாசில், தமிழிலும் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்தார்.

'பிகில்' விஜய் தொடர்பான வழக்கில் திருப்பம்!

இந்த ஆண்டு இருள், தங்கம், பாட்டு உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தாலும் இதில் 'மாலிக்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் 'மாலிக்' மே 13 அன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்போடு ஃபகத் பாசிலின் திகைப்பூட்டும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். தணிக்கையில் இப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்