Ajith: நன்றியே இல்லாத ஆள் அஜித்... பிரபல நடிகர் ஆவேசம்!
Ajith: நடிகர் அஜித்துக்கு கொஞ்சம் நன்றியே இல்லை என வேதனைப்பட்டுள்ளார் நடிகர் போண்டா மணி.
Samayam Tamil22 Mar 2023, 1:46 pm
அஜித்துக்கு பட வாய்ப்புகள் வாங்கி கொடுத்ததே நான்தான் ஆனால் அவருக்கு அந்த நன்றியே இல்லை என வருத்தப்பட்டுள்ளார் பிரபல நகைச்சுவை நடிகர்.
போண்டா மணி
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் போண்டா மணி. இலங்கை தமிழரான போண்டா மணி, இயக்குநர் பாக்கியராஜுடன் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்த பல படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்த போண்டா மணி பின்னர் நகைச்சுவை நடிகராக பிரபலமானார். Kovai Guna: பல கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது... நீங்கதான் நம்பர் ஒன்... மதுரை முத்து உருக்கம்!
இந்நிலையில் நடிகர் போண்டா மணி, சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்த மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்டு சக நடிகர்கள் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டனர். இதையடுத்து திரைத்துறையினர் பலரும் நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டினர். Mahalakshmi: ரவீந்தர் கொடுத்த பரிசு... பூரித்துப்போன மகாலட்சுமி.. வேற லெவல் ரியாக்ஷன்!
போண்டா மணி பேட்டி
இந்நிலையில் நடிகர் போண்டா மணி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்த நடிகர் அஜித்தே தனக்கு உதவி செய்யவில்லை என வேதனைப்பட்டுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, நான் உடல் நிலை பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டே விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோர் எனக்கு உதவி செய்தனர். நான் அவர்கள் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் செய்தனர். Mahalakshmi Ravindar: மகாலட்சுமிக்கு பிறந்த நாள்... ரவீந்தர் கொடுத்த பரிச பாருங்க!
ரஜினி பேசினார்
எனக்கு உடல் நிலை சரியில்லை என ரஜினி சாருக்கும் தகவல் அனுப்பினேன். உடனே செல்போனில் என்னை தொடர்பு கொண்டு பேசி நான் இருக்கிறேன் என நம்பிக்கையாக பேசினார் என்றும் சிகிச்சைக்கு பின் குடும்பத்தோடு வீட்டுக்கு வாருங்கள் என அழைத்தார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ள நிலையில் வடிவேலு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் வேதனைப்பட்டுள்ளார் போண்டா மணி. Jeevitha: நாங்க எப்போ வேணாலும் ரூம்முக்கு வருவோம்.. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குநர்.. பிரபல நடிகை திடுக்!
வடிவேலு பாரக்க கூட இல்லை
மேலும் அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் தனக்கு நடிக்க அழைப்பு விடுக்கவில்லை என்றும் வடிவேலுவை சந்திக்க தேடிச்சென்ற போது அவர் பார்க்கமலேயே திருப்பி அனுப்பி விட்டார் என்றும் நடிகர் போண்டா மணி வருத்தப்பட்டுள்ளார். மேலும் நடிகர் அஜித்துக்கு ஆரம்பத்தில் பல உதவிகளை செய்திருப்பதாகவும் அஜித் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது மைனர் மாப்பிள்ளை படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் விசி குகநாதனிடம் தான்தான் பரிந்துரை செய்ததாகவும் தெரிவித்தார்.
அதன் காரணமாகவே அஜித் எப்போதும் தன்னிடம் விஸ்வாசமாக இருப்பார் என்றும் ஆனால், அவர் வளரும் போது தனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கவில்லை என்றும், உதவி கேட்டு அவருடைய மேனேஜரை தொடர்பு கொண்டும் அவர் செய்யவில்லை என்றும் வருத்தப்பட்டுள்ளார் நடிகர் போண்டா மணி. மேலும் சினிமாவில் எல்லோரும் நன்றியோடு இருக்க மாட்டார்கள் என்றும் வேதனையுடன் கூறியுள்ளார் நடிகர் போண்டா மணி.
பெரும்பாலும் நடிகர் அஜித், பிறருக்கு உதவும் மனம் கொண்டவர் என்று பிரபலங்கள் பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் செய்த நன்றியை மறந்து விட்டு, உதவிக்கேட்டும் செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார் போண்டா மணி. போண்ட மணியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Dhanush: என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு காரணம் அவர்தான்... தனுஷ் உருக்கம்!
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.