ஆப்நகரம்

உச்சத்தில் இருந்த காமெடி நடிகர் உணவுக்காக கஷ்டப்பட்டு உயிரை விட்ட கொடுமை!

உச்சத்தில் இருந்த காமெடி நடிகர் உணவுக்காக கஷ்டப்பட்டு உயிரை விட்ட கொடுமை!

TOI Contributor 23 Dec 2016, 9:19 am
ரசிகர்களை மகிழ்விக்கும் சினிமா கலைஞர்களின் வாழ்க்கையில் பல சோகங்கள் இருக்கிறது என்பதற்கு உச்சத்தில் இருந்த காமெடி நடிகர் லூசு மோகன் வாழ்க்கை ஒரு உதாரணம். எம்.ஜி.ஆர் திரைக்கு வந்த நேரத்தில் தான் இவரும் தனக்கே உரிய ஸ்டைலோடு வாய்ப்பு தேடி பல முயற்சிக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வந்தவர். 1980 களில் இயக்குனர் சுந்தர்ராஜன், ராம நாராயணன் ஆகியோர் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தனர்.
Samayam Tamil familiar tamil comedian tragedy real life
உச்சத்தில் இருந்த காமெடி நடிகர் உணவுக்காக கஷ்டப்பட்டு உயிரை விட்ட கொடுமை!


அவர் வாழ்வில் மிக பொன்னான காலம் 1990 முதல் 1999 வரையான கால கட்டங்கள் தான்.
அதிகமான படம், கை நிறைய வருமானம், செல்வாக்கு, புகழ் என லூசு மோகனுக்கு வசதி வாய்ப்பு வந்தது. வாங்கிய சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயரில் வைத்துக்கொள்ளவில்லை. மீண்டும் அவர் வறுமையில் வாட வருமானம் ஏதும் இல்லை.

பசித்த வயிறுக்கு சோறு போட பிள்ளைகளும் முன்வரவில்லை. பசிக்கு தினமும் இரண்டு இட்லி கொடுங்கள் என பிள்ளைகளிடம் கெஞ்சி இருக்கிறார். பின்னர் பிள்ளைகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின் அடையாளம் தெரியாத உடலமைப்பில் இருந்த இவர், உடல் நிலை சரியில்லாமல் 2012 செப்டம்பர் மாதம் தன்னுடைய 84 வது வயதில் காலமானார். 1000 படங்களுக்கு மேல் நடித்து கடைசியில் கேட்பாரற்று கிடந்த இவரின் நிலை மிகவும் கொடுமையானது!

அடுத்த செய்தி

டிரெண்டிங்