ஆப்நகரம்

வசூல் வேட்டைக்கு ரெடி: களமிறங்கிய விஸ்வாசம்!

தல அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டர் ஒன்றை பதிவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வசூல் வேட்டைக்கு தயார் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Samayam Tamil 10 Jan 2019, 1:38 am
தல அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டர் ஒன்றை பதிவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வசூல் வேட்டைக்கு தயார் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Samayam Tamil mass


வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, ஜெகபதி பாபு, பேபி அனிகா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, விஜய், விவேக் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், குடும்பக் கதையை மையப்படுத்திய இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இன்று அஜித்தின் புதிய போஸ்டர் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், அஜித் கையில் அருவா வைத்திருப்பது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதோடு, வசூல் வேட்டைக்கு தயார் என்று ரஜினியின் பேட்ட படத்திற்கு சவால் விடும் வகையில், பதிவு ஒன்று பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்