ஆப்நகரம்

தமிழக முதல்வருடன் பிரபல நடிகர்கள் சந்திப்பு

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் நாசர் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

TNN 28 Sep 2016, 4:25 pm
 சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் நாசர் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
Samayam Tamil famous actors meets the tamil nadu chief minister
தமிழக முதல்வருடன் பிரபல நடிகர்கள் சந்திப்பு



தமிழக முதலவர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார் . அருக்கு அப்பலோ மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்துவருகின்றனர். சில நாட்களாக அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவந்தனர்.

இதனிடையே முதலவர் ஜெயலலிதா நேற்று மாலை காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார் இந்நிலையில் அவரை இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகிய இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்