ஆப்நகரம்

Steeve Vatz: திரைத்துறையில் அடுத்த அதிர்ச்சி: 'வாரணம் ஆயிரம்' பட பிரபலம் திடீர் மரணம்.!

பிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் திரைத்துறையினர் மத்தியில்அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 24 Mar 2023, 7:53 am
திரைத்துறை சேர்ந்த சிலர் சமீப காலமாக தொடர்ந்து காலமாகி வரும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் காமெடி நடிகர் மயில்சாமி, பிரபல மிமிக்ரி கலைஞர் கோவை குணா ஆகியோர் அடுத்தடுத்து காலமானார்கள். இந்நிலையில் பிரபல கிடார் கலைஞர் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஸ்டீவ் வாட்ஸ்
ஸ்டீவ் வாட்ஸ்


கடந்த 2008 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான 'பீமா' படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் கிடார் கலைஞர் ஸ்டீவ் வாட்சை திரைத்துறையில் அறிமுகம் செய்தார். அதனை தொடர்ந்து கெளதம் மேனனின் 'வாரணம் ஆயிரம்' படத்திலும் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றினார். இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் பிளே லிஸ்டில் உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களான இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார், இமான், அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். விஸ்வரூபம், துப்பாக்கி, நீதானே என் வசந்தம், என்னை அறிந்தால் உள்ளிட்ட ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார்.

Viduthalai: 'விடுதலை' படம் குறித்து வெளியான அதிர்ச்சிகரமான தகவல்: ரசிகர்கள் ஷாக்.!

இதனையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'உப்பு கருவாடு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக பணியாற்றினார் ஸ்டீவ் வாட்ஸ். இவர் மூளையில் கட்டி காரணமாக கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி ஸ்டீவ் வாட்ஸ் உய்ரிழ்ந்துள்ளார். 43 வயதே ஆனா ஸ்டீவ் வாட்ஸ் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leo: தளபதியோட அந்த ஸ்டைலு.. தீயாய் இருக்கே: 'லியோ' படத்தின் வெறித்தனமான வீடியோ.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்