ஆப்நகரம்

பாடலாசிரியராக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்..!

பிரபல இசையமைப்பாளரான ஹேரிஸ் ஜெயராஜ் சிங்கம்-3 படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

TNN 2 Feb 2017, 9:02 am
பிரபல இசையமைப்பாளரான ஹேரிஸ் ஜெயராஜ் சிங்கம்-3 படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
Samayam Tamil famous music director harris jayaraj became lyricist in c3 movie
பாடலாசிரியராக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்..!


கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த ஹேரிஸ் ஜெயராஜ்,கடந்த சில மாதங்களாக சரிவர பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார்.இந்நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் 'சிங்கம் 3' படத்திற்கு ஹேரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தில் “வை வை வை-ஃபை”என்ற பாடலை ஹேரிஸ் ஜெயராஜ் எழுதியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.இந்த பாடலை பாடகர்கள் கார்த்திக்,கிறிஸ்டோபர் ஸ்டேன்ட்லி மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிங்கம் 3 திரைப்படம் பல்வேறு தடைகளுக்கு இடையே,வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Famous Music Director Harris Jayaraj became lyricist in C3 movie

அடுத்த செய்தி

டிரெண்டிங்