ஆப்நகரம்

பண மோசடி புகாரில் கைதான பிரபல இசையமைப்பாளர்..!அதிர்ச்சியில் கோலிவுட் சினிமா..

பிரபல சினிமா இசையமைப்பாளரான அம்ரிஸ் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 17 Mar 2021, 12:49 pm
பிரபல பழம்பெரும் நடிகையான ஜெயசித்ராவின் மகன் அம்ரிஸ் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.இரிடியம் விற்று தருவதாக தொழில் அதிபரிடம் 26 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் அம்ரிஸ். பிரபல சினிமா இசையமைப்பாளரான இவர்,லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா', அரவிந்தசாமி நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', பிரபுதேவா நடித்த 'சார்லிசாப்ளின்-2' உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
Samayam Tamil அம்ரிஸ்
அம்ரிஸ்


சென்னை போயஸ் கார்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் அம்ரிஷ் , நேற்று காலை சென்னை தியாகராயநகர் கிருஷ்ணா தெருவில் உள்ள ஒரு வீட்டில் சினிமா இசை அமைப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தார்.அப்போது அங்கு சென்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக அவரை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர்.இந்த விஷயம் வெளியே தெரிந்த பின்னர்,அவரை எதன் காரணமாகாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர் என்பது மர்மமாகவே இருந்தது.

இதனையடுத்து நடிகை ஜெயசித்ரா நேற்றைய தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, 'தனது மகனை சீருடை அணியாமல் வந்த சிலர் போலீஸ் என்று கூறி அழைத்து சென்று விட்டனர்' என்றும், தற்போது அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றியும் ஒன்றும் தெரியவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.அப்போதுதான் மோசடி வழக்கு ஒன்றில் அம்ரிஷை கைது செய்த விஷயத்தை நடிகை ஜெயசித்ராவிடம் தெரிவித்துள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 'பேச்சுலர்' திரைப்படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம்..!

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயசித்ரா, போலிஸ் அதிகாரிகளிடம் பேசியும் , தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் பேசியும் மகனை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளார்.ஆனால் ஜெயசித்ரா எவ்வளவோ முயற்சி செய்தும் , அவரால் அம்ரிஷை வெளியே கொண்டு வர இயலவில்லை. இசையமைப்பாளர் அம்ரிஸ் மீது ரூ.26 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு செய்திக்குறிப்பு வெளியிட்டனர்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜானகி நகரைச் சேர்ந்த நெடுமாறன் என்பவரிடம், அரிய வகை இரிடியம் என்ற பொருளை தருவதாகவும், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் அது விலை போகும் என்றும் கூறி ஆசை காட்டி இருக்கின்றனர் அம்ரிசும் அவரது நண்பர்களும். இதனை உண்மையென நம்பி 26 கோடி கொடுத்து அந்த இரிடியத்தை வாங்கியுள்ளார் நெடுமாறன். பின்னர் அது போலியான இரிடியம் என தெரிந்த பின்னர் , அம்ரிஸ் மீது போலீசில் மோசடி புகார் அளித்துள்ளார் நெடுமாறன்.

கடந்த 2013-ம் ஆண்டு பதிவு செய்யப்பட இந்த வழக்கில் தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் அம்ரிஸ்.இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் 'நானே என்னுள் இல்லை' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் இவர்.பிரபல இசையமைப்பாளர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்படிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்