ஆப்நகரம்

என்னமா ஏமி, இப்படி இருக்கீங்களேமா?: டாப்லெஸ் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

ஏமி ஜாக்சன் வெளியிட்ட டாப்லெஸ் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 18 Nov 2020, 6:04 pm
ஏ.எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன். விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த ஏமி தி வில்லன் படம் மூலம் கன்னட திரையுலகிலும் நுழைந்தார். ஏமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2.0.
Samayam Tamil amy jackson


இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரியாஸ் பனயூட்டுவின் மகன் ஜார்ஜை காதலித்து வந்தார் ஏமி. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏமி ஜாக்சனுக்கும், ஜார்ஜுக்கும் நிச்சயம் நடந்தது. இதையடுத்து கர்ப்பமான ஏமி கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மகனுக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

தன் மகனின் புகைப்படங்களை ஏமி தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். மேலும் தன் கவர்ச்சி புகைப்படங்களையும் போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஏமி தன் டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram A post shared by Amy Jackson (@iamamyjackson)
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு காரணம் ஏமி மேலாடை இல்லாமல் இருப்பது இல்லை. மாறாக எலும்பும் தோலுமாக இருப்பது தான். ஏன் ஏமி, என்னாச்சு, இப்படி ஒல்லியாகிவிட்டீர்களே, உடம்புக்கு முடியலயா என்று ரசிகர்கள் அக்கறையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிலரோ ஓமைகாட், வாவ், சூப்பர், செம ஹாட் என்று புகழ்ந்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஏமி ஜாக்சன் தெரிவித்தார். மகனும் பிறந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது எப்பொழுது திருமணம் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.

மகன் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு மீண்டும் நடிப்பைத் தொடர்வாராம். மேலும் மகனுடன் உலகம் சுற்ற விரும்புவதாக ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

ஹீரோ பொண்டாட்டிக்கு புடிக்கலனு என்னை படத்தில் இருந்து தூக்கிட்டாங்க: டாப்ஸி
https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/i-was-replaced-from-a-movie-because-of-heros-wife-taapsee/articleshow/79280693.cms

அடுத்த செய்தி

டிரெண்டிங்