ஆப்நகரம்

எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டார்: வீடியோவால் கண்கலங்கிய கேப்டன் ரசிகாஸ்

பிரேமலதா தனது கணவருக்கு ஷேவ் செய்து, ஹேர் கலர் செய்த வீடியோவை பார்த்த சினிமா ரசிகர்கள் பெருமை அடைந்ததுடன் கண்கலங்கிவிட்டார்கள்.

Samayam Tamil 20 Apr 2020, 2:26 pm
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருக்கிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சலூன் கடைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் விஜயகாந்த் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil vijayakanth


அந்த வீடியோவில் பிரமேலதா விஜயகாந்துக்கு ஷேவ் செய்து, மீசை, தலைமுடிக்கு டை அடித்து, நகங்களை வெட்டி, ஷேப் செய்துள்ளார். பேக்கிரவுண்டில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது.

வீடியோவின் இறுதியில் விஜயகாந்த் ஒரு சிரிப்பு சிரித்திருப்பார். அதை பார்த்து தான் சினிமா ரசிகர்களும், அவரின் ஆதரவாளர்களும் அசந்துவிட்டனர்.


விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

கேப்டன் கொடுத்து வைத்தவர். கணவரை ஒரு குழந்தை போன்று பார்த்துக் கொள்கிறார் பிரேமலதா அண்ணி. கேப்டன் நலமாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

லாக்டவுனால் விஜயகாந்த் மகன் செய்த காரியத்தை பார்த்தீங்களா?

அவர் பழைய பன்னீர்செல்வமாக வெளியே வர வேண்டும். அதை பார்த்து நாங்கள் ரசிக்க வேண்டும். வீடியோவை பார்த்து ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் வருத்தமாக இருக்கிறது. ஜெயலலிதாவை நேருக்கு நேர் கேள்வி கேட்ட ஒரே ஆம்பள இப்படி ஆகிவிட்டார் என்பதை பார்க்க கஷ்டமாக உள்ளது.

எப்படி கம்பீரமாக இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே. தயவு செய்து இனி இது போன்ற வீடியோவை எல்லாம் வெளியிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்