ஆப்நகரம்

Dhanush தனுஷுக்கு சிலை வைத்த ரசிகர்கள்: ஆனால் பார்க்க செல்வராகவன் மாதிரி இருக்கே

பட்டாஸ் ரிலீஸையொட்டி தனுஷ் ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்துள்ளார்கள்.

Samayam Tamil 15 Jan 2020, 12:44 pm
பட்டாஸ் ரிலீஸையொட்டி தனுஷ் ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்துள்ளார்கள்.
Samayam Tamil fans keep statue for dhanush at a theatre on pattas day
Dhanush தனுஷுக்கு சிலை வைத்த ரசிகர்கள்: ஆனால் பார்க்க செல்வராகவன் மாதிரி இருக்கே


பட்டாஸ்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்சாதா, நாசர் உள்ளிட்டோர் நடித்த பட்டாஸ் படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று ரிலீஸாகியுள்ளது. தனுஷ் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலும் தனித்து தெரிகிறார். மனிதர் நடிப்பில் நாளுக்கு நாள் தேறிக் கொண்டே போகிறார். அப்பா தனுஷ் ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

தனுஷ் சிலை

பட்டாஸ் ரிலீஸையொட்டி ரசிகர்கள் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் வளாகத்தில் தனுஷுக்கு சிலை வைத்துள்ளனர். அப்பா திரவியம்பெருமாள் கதாபாத்திரம் போன்று சிலை வைத்திருக்கிறார்கள். அந்த சிலையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் ரசிகர்கள்.

Twitter-#PattasFromToday #Pattas #PattasPongal Statue f...

மகிழ்ச்சி

சிலையை பார்க்க அப்படியே தனுஷ் போன்று இருப்பதாக அவரின் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் விஜய் ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாஸ் படம் பற்றி பாசிட்டிவாக விமர்சனம் வருவதை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொங்கலுக்கு பட்டாஸ் தான் வின்னர் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்துவிட்டனர். தனுஷுக்கு ரசிகர்கள் சிலை வைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

Twitter-பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு @RamCinemas #Pat...

யார் சிலை?

தனுஷுக்கு சிலை வைக்கிறேன் என்று அவர் அண்ணன் செல்வராகவனுக்கு வைத்திருக்கிறீர்களே என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலையை நல்லா பாருங்கப்பா செல்வராகவன் மாதிரியே இருக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Twitter-@dhanushfans24x7 @dhanushkraja @RamCinemas Looks m...

அடுத்த செய்தி

டிரெண்டிங்