ஆப்நகரம்

தல அஜித்தின் 25 வருட சினிமா: 4 அடி உயரத்தில் சிலையை திறந்து வைத்து அசத்திய ரசிகர்கள்

தல அஜித்தின் 25 வருட சினிமா வாழ்க்கையை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்து அசத்தியுள்ளனர்.

TNN 3 Aug 2017, 4:38 pm
தல அஜித்தின் 25 வருட சினிமா வாழ்க்கையை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்து அசத்தியுள்ளனர்.
Samayam Tamil fans of thala ajith oened ajith statue in tanjavore district
தல அஜித்தின் 25 வருட சினிமா: 4 அடி உயரத்தில் சிலையை திறந்து வைத்து அசத்திய ரசிகர்கள்


எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் கடின முயற்சியாலும், உழைப்பாலும் சினிமாவில் கால் பதித்தவர் தல அஜித். அமராவதியில் தொடங்கி வெளியாக இருக்கும் விவேகம் வரை எத்தனோ தோல்விகளையும், வெற்றிகளையும் கொடுத்த தல எத்தனையோ விபத்துக்களையும் சந்தித்துள்ளார். அதிலிருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் வந்து தற்போது சினிமாவில் 25 ஆண்டுகால வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தற்போது அஜித்தின் 25 ஆண்டுகால வாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் 25 Years Of Ajithism என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.



இதனைத் தொடர்ந்து அருண் விஜய், 25 வருடங்களாக எங்களை ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி. உங்களுடன் பணியாற்றியது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திம்மக்குடியில் அஜித் ரசிகர்கள் அவரது முழு உருவச்சிலையை திறந்து அஜித்தின் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தல அஜித்தின் இந்த சிலை ரூ.1 லட்சம் செலவில் கிட்டத்தட்ட 20 நாட்களாக இரவு, பகலாக கஷ்டப்பட்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.



சுமார் 4 அடி உயரமும் 20 கிலோ எடையும் கொண்டுள்ள தல சிலை காந்தியடிகள் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நடிகர் இமான் அண்ணாச்சி திறந்து வைத்தார். விவேகம் படத்தில் நடித்த தல அஜித்தின் புகைப்படத்தைக் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஹரிபாபு என்பவர் வடிவமைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்