ஆப்நகரம்

சமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! பூஜா ஹெக்டேவுக்கு குவியும் ஆதரவு

இன்ஸ்டாகிராமில் சமந்தா, சின்மயி, நந்தினி ரெட்டி கமெண்ட் செய்த ஸ்கிரீன்ஷாட் வைரலான நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு ஆதரவாக ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

Samayam Tamil 29 May 2020, 7:37 pm
சினிமா துறையில் ரசிகர்கள் சண்டை என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் நடிகர்களின் ரசிகர்கள் எதாவது ஒரு காரணத்திற்காக சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தா ரசிகர்களும், பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி வருகின்றனர்.
Samayam Tamil Samantha, Pooja Hegde


நேற்று பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

அது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் ஆகிவிட்டது என்று கூறி இருந்தார். அதன் பிறகு சற்று நேரம் கழித்து டெக்னிக்கள் டீம் உதவியுடன் அதை மீட்டதாக தெரிவித்தார். போடப்பட்ட பதிவுகளையும் கணக்கில் இருந்து நீக்கிவிட்டார் பூஜா. ஆனாலும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர்.

இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் கமெண்டில் சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சிக்கும் வகையில் பேசிக்கொண்டனர். அந்த கமெண்டுகளை பின்னர் நீக்கிவிட்டனர்.

அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. பூஜா ஹெக்டே தவறு செய்தாரா என உறுதியாக தெரியாத நிலையில் இப்படி சமந்தா-சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.


#WesupportPoojaHegde என ட்விட்டரில் அதிகம் ரசிகர்கள் பூஜாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். சமந்தா பேசி இருப்பது சர்ச்சை ஆகி உள்ள நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர்.

பலரும் சமந்தாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமந்தா இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை. ட்விட்டரில் peace symbol காட்டி போட்டோ வெளியிட்ட சமந்தா, அதன் பிறகு இப்படி பேசி இருப்பது எந்த ரகம் என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.


மேலும் பெண்கள் எப்போதும் ஆண்களால் பிரச்னையை சந்திக்கிறார்கள் என ட்விட்டரில் பேசும் சின்மயி, பூஜா தவறு செய்தாரா என தெரியாமலேயே, மற்றொரு பெண்ணை இவ்வளவு ஏளனமாக பேசுவது சரியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யார் மீது தவறு என உறுதிப்படுத்தாமல் இப்படி குரூப் சேர்ந்து மோசமாக பேசுகிறீர்கள். Feminism பற்றி பேசும் நீங்கள் அதில் இதை எதில் சேர்ப்பீர்கள் என ஒருவர் கேட்டுள்ளார்.


மேலும் பலர் சமந்தா மற்றும் சின்மயி ஆகியோரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.



இவர்கள் சண்டை விஜய் - அஜித் ரசோகர்களின் சண்டையை முந்திவிடும் போல இருக்கே என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா கடைசியாக 96 பட தெலுங்கு ரீமேக் ஜானு படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து லாக்டவுனில் தனது கணவர் உடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவுள்ளார்.

பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த வருடம் பொங்கலுக்கு வந்த Ala Vaikunthapurramuloo படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. குறிப்பாக அந்த படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் இணையத்தில் மிகப்பெரிய ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து தன் கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.

அடுத்த செய்தி

டிரெண்டிங்